பந்த் சதம் வீண் - சாதனையை முறியடிக்க இந்தியா தவறியது

 India vs South Afirica | இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற தென்னாப்பிரிக்க அணி 2-1 என தொடரையும் கைப்பற்றியது.

தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் கடந்த 11-ம் தேதி இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 223 ரன்கள் எடுத்ததுடன், தென்னாப்பிரிக்காவை 210 ரன்களில் சுருட்டி 13 ரன்கள் முன்னிலை பெற்றது.

இரண்டாவது இன்னிங்சில் ரிஷப் பந்த் சதமடிக்க மற்ற வீரர்கள் சோபிக்கத் தவறியதால் 198 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட் ஆனது. 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க வீரர்கள் நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக கீகன் பீட்டர்சன் மற்றும் வாண்டர் துஷேன் (Van der Dussen) நங்கூரமிட்டது போல் விளையாடியதால் இந்த இணையை பிரிக்க முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் திணறினர்.


81 ரன்களில் பீட்டர்சன் ஆட்டமிழந்தநிலையில், அடுத்து வந்த பவுமா தனது பங்கிற்கு விளையாடி ஸ்கோரை உயர்த்தியால் தென்னாப்பிரிக்கா அணி இலக்கை எளிதாக எட்டியது. தொடரை முதல்முறையாக வென்று வரலாறு படைக்கலாம் என்ற இந்திய அணியின் கனவு தகர்ந்தது.

Earn BITCOIN Now! 1/Month



சாதனை முறியடிக்க முடியாத இந்திய அணி:

தென்னாப்பிரிக்கா மண்ணில் டெஸ்ட் தொடரை‌ இந்திய வென்றதே இல்லை என்ற மோசமான சாதனையை இந்த‌ முறை இந்திய அணி முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது , ஏன் எனில் 1-ல் டெஸ்ட் போட்டியில் இந்திய‌ அணி வென்றது தொடரில் 1-0 என்ற முன்னிலையில் இருந்து 2-1 என்று தோல்வியை தழுவியது. 


தென்னாப்பிரிக்கா மண்ணில் டெஸ்ட் தொடரை‌ இது வரை உலகில் 3 அணிகள் மட்டுமே வென்றுள்ளது (இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை) இந்த 3 அணிகள் மட்டுமே வென்றுள்ளது (1880 - பின்).


இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Sports News), அண்மை செய்திகள் (Latest Tamil News, Breaking News, Serial Updates) என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் Tamil News 366 இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.


Home - CLIKC HERE ✋

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu