தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், 12ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் ஆல்-பாஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக இந்தியா முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் கடந்த ஆண்டு மார்ச் முதலே மூடப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலமே மாணவர்களுக்குப் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.
இருப்பினும், ஆன்லைன் கல்வியால் கற்றல் பாகுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பள்ளிகளை விரைவாக மீண்டும் திறக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தினர்.
பள்ளிகள் திறப்பு
இதற்கிடையே வேக்சின் பணிகளுக்குப் பிறகு, வைரஸ் பாதிப்பு வேகமாகக் கட்டுக்குள் வரத் தொடங்கியது. இதனால், கடந்த செப். மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் படிப்படியாகத் திறக்கப்பட்டன. முதலில் 9 முதல் +2 மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்ட நிலையில், அதன் பின்னர் சில வாரங்களில் இதர மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளைத் தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்தது. நிலையான கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பள்ளி, கல்லூரிகள் வாரத்திற்கு 6 நாட்கள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Earn 0.5 BITCON (17.5 Lakhs) in One month!
மீண்டும் மூடல்
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகக் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் வரும் ஜன. 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பல கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி மழலையர் விளையாட்டு பள்ளிகள் (Pay Schools), நர்சரி பள்ளிகள் (LKG, UKG) செயல்பட அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து பள்ளிகளிலும், 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்தத் தடை விதிக்கப்படுகிறது.
ஆல்பாஸ்
கொரோனா பாதிப்பு வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், 12ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் ஆல்-பாஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் அமலில் உள்ள இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின்படி 8ஆம் ஆண்டு வரை எந்த மாணவரையும் பெயில் செய்யக்கூடாது. இந்நிலையில், அத்துடன் சேர்த்து 12ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் ஆல்பாஸ் செய்யப் பள்ளிக்கல்வித் துறை ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
என்ன திட்டம்
அதேநேரம் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளைத் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக இந்த ஆண்டு முதலில் 10ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் செய்யப்பட்டனர். அதன் பின்னர் வைரஸ் பாதிப்பு அதிகரித்ததைத் தொடர்ந்து முதலில் சிபிஎஸ்இ +2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அதன் பிறகு அனைத்து மாநிலங்களிலும் +2 தேர்வு ரத்து செய்யப்பட்டு, விகிதாச்சார முறையில் மதிப்பெண் வழங்கப்பட்டது.
0 கருத்துகள்